Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 10, 2016

கர்நாடகாவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!



தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகா முழுவதும் நேற்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

கன்னட அமைப்புகள் நேற்று நடத்திய போராட்டம் காரணமாக கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உட்பட மாநிலம் முழுவதும் ரயில், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவை வெகுவாக பாதிக்கப்பட்டது.

பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அனைவரும் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்பு நடவடிக்கையாக பெங்களூரு நகரம் முழுவதும் சுமார் 16 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே, கர்நாடகா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட தமிழ் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பும் நிறுத்தி வைக்கப்பட்டன. பெல்லாரி பகுதியில் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது.

கர்நாடக திரைத்துறையினரும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.

கர்நாடகாவில் பெரும்பாலான உணவு விடுதிகள் மூடப்பட்டிருந்தன. இதனால், தமிழர்கள் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் உணவு கிடைக்காமல் தவித்தனர். மேலும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் சுமார் 500 பேருந்துகள் நேற்று இயக்கப்படவில்லை.

பெங்களூர் எம்.ஜி ரோடு அருகே போராட்டக்காரர்கள் வாகன பேரணி:
தொடர் போராட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் கர்நாடகாவில் தவித்து வருகின்றனர்.


பெங்களூர் - மைசூரு சாலையில் முற்றிலும் போக்குவரத்து முடக்கம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்..

மாண்டியாவில் நடைபெற்ற அரைநிர்வான போராட்டம்:
பேருந்துகள் இயக்கப்படாததால் பனசங்கரி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் உள்ளூர் பேருந்துகள்:






பெங்களூரு - மைசூரு சாலை முடக்கப்பட்டுள்ள காட்சி:

மாண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ் அணையை  முற்றுகையிட சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய காட்சி, சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.