September 7, 2016
பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எளிய தற்காப்பு முறைகள்!
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த 21ம் நூற்றாண்டில் பெண்களால் செய்ய முடியாத செயல் என்று எதுவுமே இல்லை. அவர்கள் நுழையாத துறைகளும் இல்லை. “அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு” என்று கூறியவர் மட்டும் இப்போது இருந்திருந்திருந்தால் தாம் சொன்னதின் தவறை நிச்சயம் உணர்ந்திருப்பார். ஆண்களால் சாதிக்க முடியாத சாதனைகளை எல்லாம் பெண்கள் எளிதில் சாதித்து காட்டுகிறார்கள்.
கல்வி, விளையாட்டு, அரசியல், சமூகம் என அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களது திறமைகளை நிரூபித்துக்காட்டுகிறார்கள். அவர்கள் தங்களுடைய சாதனைகள் மூலம் வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கின்றனர்.
ஆனால் பெண்கள் எவ்வளவு தான் சாதித்தாலும் அவர்களுக்கு எதிரான உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதி முதல் சமீபத்தில் தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் வெட்டிக்கொல்லப்பட்ட பெண் வரை சமீபத்தில் பெண்களுக்கு எதிரான கொலைகள் அதிகரித்துள்ளன என்பதே கசப்பான உண்மை. பெண்களுக்கு எதிராக நமது சமூகத்தில் வன்முறைகள் அதிகரித்துவருகின்றன.
ஒரு நாட்டில் சட்ட ஒழுங்கானது என்னதான் சீராக இருந்தாலும் தனிப்பட்ட ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக பாதுகாப்பது என்பது ஒரு அரசிற்கு நடைமுறையில் இயலாத காரியம் ஆகும். தனிப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு காவலாளியை நியமிப்பது என்பது இயலாத காரியம் ஆகும்.
எனவே பெண்கள் தங்களை ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து காத்துக்கொள்ள ஒரு சில அடிப்படையான தற்காப்பு முறைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
இந்த காலத்தில் பெண்கள் வேலைக்காகவும் உயர் கல்விக்காகவும் தங்கள் சொந்த ஊர்களை விட்டுவிட்டு நகரங்களுக்கு வந்து வாழ்கின்றனர். அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலிருந்து அலுவலகங்களுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ செல்லும்போது மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் சாலைகள் வழியாக செல்வது அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.
பெண்கள் வெளியே செல்லும் போது அறிமுகம் இல்லாத நபர் உங்களை பின் தொடர்வதாக உணர்ந்தால் அவரிடம் இருந்து எப்போதும் சற்றே விலகியிருங்கள். அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து ஆபத்து வந்தால் அதாவது அவர் உங்களை அத்துமீறி தொட்aது. மேலும் அவர் உங்களை தாக்கினால் உங்கள் கரங்களால் அவரை பிடித்து தள்ளிவிடுங்கள். மேலும் உங்களை விட்டு தொலைவில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு உங்களால் முடிந்த அளவு சத்தமாக கத்தி கூச்சலிடுங்கள் அதானால் உங்களை தாக்குபவர் கண்டிப்பாக பயப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
நீங்கள் எங்கேயாவது தனியாக வெளியே செல்லும்போதோ அல்லது எதிர்பாராத விதமாக தனியாக யாரிடமாவது மாட்டிக்கொண்டாலோ அவர் உங்களை தாக்க முற்படும்போது உங்களிடன் ஏதேனும் ஆயுதமோ அல்லது பொருளோ இல்லையென்றால் நீங்கள் முந்திக்கொண்டு உங்கள் உள்ளங்கையால் உங்கள் எதிரியின் மூக்கில் ஓங்கி அடிக்கலாம். அதன் மூலம் நீங்கள் அவரிடமிருந்து உங்களை தற்காத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.
அடையாளம் தெரியாத நபர் உங்களைத் தாக்க வரும்போது உங்களிடம் இருக்கும் சாவிக்கொத்து, குடை, வாட்டர் கேன், சீப்பு, பேனா போன்ற எதையாவது வைத்து தாக்கலாம்.
பெண்கள் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு யாராவது உங்களை தாக்க வந்தால் வீட்டில் இருக்கும் கத்தி, கனமான தடி, அல்லது பிளாஸ்டிக் பைப், அல்லது மிளகாய் பொடி, மிளகு பொடி போன்றவற்றையே உங்களை தற்காத்துக்கொள்ளும் ஆயுதமாக பயன்படுத்தலாம்.
மேலும் பெண்களுடைய ஹண்ட் பேக்கில் (Hand bag) சிறிய கத்தி, பேனா, Tool kit, Cables, மிளகாய் பொடி, மிளகு பொடி போன்ற முக்கியமான பொருட்களை வைத்திருப்பது அவசியம்.
அறிமுகம் இல்லாத அல்லது அடையாளம் தெரியாத ஆண்கள் பெண்களாகிய உங்களிடம் பொது இடத்திலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ தவறாக நடந்துகொள்ள முயற்சித்தால் உங்களுடைய முழங்கையால் அவரது முகத்திலோ அல்லது மார்பிலோ தாக்கலாம். மேலும் உங்களுடைய கால் முட்டியால் உங்களை தாக்க வருபவரை தாக்கலாம்.
பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எளிய தற்காப்பு முறைகள்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.