Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 7, 2016

சுவாதி கொலையை வைத்து மதக் கலவரம்? - திலீபன் மகேந்திரன் அதிரடி பேட்டி



சுவாதி கொலையை வைத்து மதக்கலவரம் உருவாக்க திட்டமிட்டார்கள் என்று சுவாதி கொலை வழக்கில் அதிரடி பதிவுகளை பதிவிட்ட திலீபன் மகேந்திரன் கூறியுள்ளார்.
 

 
இந்திய தேசியக் கொடியை எரித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர் திலிபன் மகேந்திரன், மென்பொறியாளர் சுவாதி கொலையாளிகள் குறித்த ஆதாரம், தம்மிடம் உள்ளதாக திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.

இவர் மீது பிஜேபி பிரமுகர் கருப்பு முருகானந்தம் கொடுத்த புகாரில் திருவாரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனால் இவர் மீது அவதூறு வழக்கு போடப்பட்டது.

இதையடுத்து திலீபன் மகேந்திரன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று திலீபன் மகேந்திரன் ஜாமீனில் வெளிவந்தார்.

சிறையிலிருந்த வெளியே வந்த திலீபன் மகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’என்னுடைய உயிருக்கு 5 லட்சம் விலை வைத்திருந்ததாகவும், அதனால் என்னை பாதுகாக்கும் பொருட்டு, உயர் பிரிவு பாதுகாப்பில் தான் சிறை பிடித்துள்ளோம் என்று சொல்லி சிறையில் உள்ள பைத்தியங்களோடு என்னை அடைத்துவிட்டார்கள்.

சுவாதி கொலையில் உண்மைகளை வெளியே சொல்வதினால் ஒரு தேடப்படும் குற்றவாளி கொடுத்த புகாரின் பேரில் என்னை கைது செய்திருக்கிறார்கள்.

நான் சுவாதி வழக்கின் உண்மையான குற்றாவளி யார் என்பதை  கண்டிப்பாக வெளியே கொண்டு வருவேன். சுவாதி கொலையை வைத்து மதக்கலவரம் உருவாக்க திட்டமிட்டார்கள்” என்று கூறியுள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.