September 26, 2016
தொடரும் வன்புணர்வு சம்பவங்கள்: ஓடும் ரயிலில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்
ஓடும் ரயிலில் இளம் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம், அசாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் டின்சுகியா நகரைச் சேர்ந்த இளம் பெண், பெங்களூருவிலிருந்து தனது சொந்த ஊருக்கு பெங்களூரு டின்சுகியா எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ரயிலில் இருந்த 3 இளைஞர்கள் அந்த பெண்ணை கழிவறை அருகே அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர்.
டின்சுகியா நகரை ரயில் வந்தடைந்தபோது, பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து ரயில்வே காவல் துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் 3 இளைஞர்களில், ஒருவரை கைது செய்தனர். தப்பியோடிய 2 இளைஞர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்திற்கு பின்னர் நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளதாக விமர்சனம் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஓடும் ரயிலில் பாலியல் கொடுமை நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடரும் வன்புணர்வு சம்பவங்கள்: ஓடும் ரயிலில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.