Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 29, 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முதலைமைச்சர் உத்தரவு



முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்குவது தொழிலாளர்களின் உழைப்பே ஆகும்.தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பும் முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வழிவகுக்கும்.உற்பத்தியை பெருக்கி, அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்புபெரும் பங்கு வகிக்கிறது.

எனவேதான் தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு  பொதுத் துறைநிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2015-16 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015இன் படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு 21000 ரூபாய் என மத்தியஅரசால் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்தஆண்டுகளில் 10,000 ரூபாய் என இருந்த தகுதி வரம்பை தளர்வு  செய்துஅனைத்து‘சி‘மற்றும்‘டி‘பிரிவு  தொழிலாளர்கள் போனஸ் பெற வழிவகை செய்யப்பட்டதைப் போலவே தற்போது ரூ.21000 என்ற சம்பள உச்சவரம்பை தளர்வு செய்துஅனைத்து‘சி‘மற்றும்‘டி‘பிரிவு தொழிலாளர்களுக்குபோனஸ் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

போனஸ் கணக்கிட ஏற்கெனவே 3500 ரூபாய் எனஇருந்தமாதாந்திர சம்பளஉச்சவரம்புதிருத்தியபோனஸ் சட்டம் 2015-ன் படி, 7000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அந்த அடிப்படையில் 2015-16ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைஉதவித் தொகைவழங்கநான் உத்தரவிட்டுள்ளேன்.இதன்படி :

1.இலாபம் ஈட்டியுள்ள பொதுத் துறைநிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு   ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகைவழங்கப்படும்.

2.நட்டம் அடைந்துள்ள பொதுத் துறைநிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடுபோனஸ் மற்றும் கருணைத் தொகைவழங்கப்படும்.

3.தமிழ்நாடு மின்சாரவாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடுபோனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

4.இலாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குபோனஸ் மற்றும் கருணைத் தொகைமொத்தம் 20 விழுக்காடுவரையிலும் ஒதுக்கக்கூடிய உபரிதொகைக்கு ஏற்பவழங்கப்படும்.  பிறகூட்டுறவு சங்கங்களில்பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 விழுக்காடு குறைந்த பட்சபோனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகைவழங்கப்படும்.

5.தமிழ்நாடு வீட்டுவசதிவாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றுவாரியத்தில் பணிபுரியும் ‘சி‘மற்றும் ‘டி‘பிரிவுபணியாளர்களுக்கு 8.33 விழுக்காடுபோனஸ் மற்றும் 1.67 விழுக்காடுகருணைத் தொகை எனமொத்தம் 10 விழுக்காடுபோனஸ் மற்றும் கருணைத் தொகைவழங்கப்படும்.

6.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘சி‘மற்றும் ‘டி‘பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

7.அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்டகழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால்உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில்பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு, அந்த நிறுவனங்களின் லாபநட்டத்திற்கு ஏற்ப ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கருத்தில்கொண்டு 8.33 விழுக்காடுபோனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகைக்கு மிகாமலோ அல்லது 8.33 விழுக்காடுபோனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையோ வழங்கப்படும்.

8.தமிழ்நாடுபாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள்கழகத்தில் பணிபுரியும் ‘சி‘மற்றும் ‘டி‘பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடுபோனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

9.ஒதுக்கக்கூடிய உபரிதொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘சி‘மற்றும் ‘டி‘பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகைக்கு மிகாமல் வழங்கப்படும்.  ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘சி‘மற்றும் ‘டி‘பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

10.இது தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ்வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால் போனஸ் பெறதகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 8400 ரூபாய்அதிகபட்சம் 16800 ரூபாய்பெறுவர்.தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து67ஆயிரத்து 887 தொழிலாளர்களுக்கு 476 கோடியே71லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும்.அரசின் இந்த நடவடிக்கை காரணமாக பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாடவழி வகை ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.