September 7, 2016
பெண்களை ஆபாசமாக படம் பிடித்த போலி சி.பி.ஐ. அதிகாரி கைது
சென்னை திருவான்மியூரில் சி.பி.ஐ. அதிகாரியை போல் நடித்து, பெண்களை ஆபாசமாக படம் பிடித்த தாமோதரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை, வண்ணாந்துறை, மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தாமோதரன். 27 வயதான இவர், அருகில் உள்ள பெண்கள் விடுதிக்கு வரும் பெண்களை படம் பிடித்துள்ளார். இது பற்றி தட்டிக்கேட்ட விடுதி நடத்துனரிடம், தான் ஒரு சிபிஐ அதிகாரி எனக் கூறி, ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினரிடம் விடுதியை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் தாமோதரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் போலி சி.பி.ஐ. அதிகாரி எனத் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடமிருந்த போலி சி.பி.ஐ. அடையாள அட்டை, தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அடையாள அட்டை, வழக்கறிஞர் அடையாள அட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர் பயன்படுத்தி வந்த சைரன் பொருத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தாமோதரன் மீது மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களை ஆபாசமாக படம் பிடித்த போலி சி.பி.ஐ. அதிகாரி கைது
Reviewed by மறத்தமிழன்
on
September 07, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
September 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.