குறி சொல்வது, கைரேகை பார்ப்பது, கிளி ஜோதிடம், வெற்றிலையில் மை தடவுவது, நாடி ஜோதிடம், முகம் பார்த்து சொல்வது, ஜாதக கட்டங்கள் வைத்து பலன் கூறுவது என பல வகை ஜோதிடங்கள் நாம் பார்த்திருப்போம். இவர்கள் எல்லாரும் நமது முந்தைய காலம், எதிர்காலம் குறித்து சில பலன்கள் கூறுவார்கள்.
ஆனால், சீனாவை சேர்ந்த ஒரு உட்டாலக்கடி ஆசாமி பெண்களுக்கு, அவர்களது மார்பகத்தை தொட்டு எதிர்காலம் கூறி வருகிறார். சீனர்கள் உணவில் தான் வினோதமாக எதையெதையோ செய்கிறார்கள் என்றால் எதிர்காலம் கூறுவதிலும் வேற லெவலில் இறங்குகிறார்கள்...
எதிர்காலம் கூறுவார் என்று உட்கார்ந்தால் அந்த வயதான உட்டாலக்கடி ஆசாமி மார்பை தொட்டு என்ன செய்கிறார் என தெரியவில்லை.
நமது ஊரில் குடுகுடுப்பைக்காரன், பாம்பாட்டியை சுற்றி இருப்பது போல, இதை காண ஒரு பெரும் கூட்டமே காத்திருக்கிறது.
இந்த 8 நொடி வீடியோ, சீனாவை சேர்ந்த மியோபை எனும் சிறிய அளவிலான காணொளிகளை பதிவு செய்து பகிரும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பதிவை சியாவ் யூவன் எனும் நபர் பயண புகைப்பட கலைஞர் ஒருவர் தான் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதை பதிவு செய்த புகைப்பட கலைஞரான சியாவ் யூவன் தான், எதிர்காலம் கூறுகிறேன் என பெண்களின் மார்பை தொட்டு ஒருவர் குறி கூறி வருகிறார் என ஸ்டேடஸ் சேர்த்து, இந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.
மிக சிறிய வீடியோ என்பதாலும், இந்த வீடியோ மிக சிறிய இடத்தில், அதிக மக்கள் நெருக்கடியில் எடுத்திருப்பதாலும், சீனாவின் எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என அறியப்படவில்லை.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.