September 7, 2016
மதுரை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பட்டப்பகலில் அரசு மருந்தாளர் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலூர் அருகே நாவினிபட்டியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர், சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளராக பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம் போல பணிக்கு சென்று விட்டு மாலையில் அவர் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள், 40 ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் துப்பு துலக்கி வருகின்றனர். மதுரை – காரைக்குடி செல்லும் பிரதான சாலையின் அருகே வீடு புகுந்து பட்டபகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.