September 28, 2016
தேமுதிகவின் இன்னொரு விக்கெட் விழுந்தது
கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எந்த நேரத்தில் மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி என்று அறிவித்தாரோ, அந்த நேரத்தில் இருந்து தேமுதிகவின் விக்கெட்டுக்கள் விழுந்து கொண்டே இருக்கின்றது.
கடந்த சில மாதங்களாக தேமுதிகவின் பிரமுகர்கள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து வரும் நிலையில் தற்போது லேட்டஸ்ட்டாக விழுந்த விக்கெட் திருப்பூர் மாவட்ட செயலாளரான தினேஷ்குமார். திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய பொறுப்பாளர்களுடன் தேமுதிகவில் இருந்து விலகி இன்று காலை மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, திமுகவில் இணைத்துக்கொண்டார்.
சட்டமன்ற தேர்தலின் போது தேமுதிகவில் பெரும் அதிருப்தி வெளிப்பட்ட போது, முதலில் தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டவர் தினேஷ்குமார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இப்போது மாவட்ட நிர்வாகிகளுடன் திமுகவில் இணைந்துள்ளார் தினேஷ்குமார். ஸ்டாலினை சந்தித்து, கட்சியில் இணைத்துக்கொண்ட தினேஷ்குமார், விரைவில் கொங்கு மண்டலத்தில் உள்ள 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திமுகவில் இணைய உள்ளதாகவும், இதற்கான விழாவுக்கு ஸ்டாலினிடம் தேதி கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேமுதிகவின் இன்னொரு விக்கெட் விழுந்தது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.