கோவையில் இந்துமுன்னணியின் செய்தித்தொடர்பாளர் சசிக்குமார் மர்மநபர்களால் வியாழனன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சொந்த காரணங்களால் நடைபெற்றதா அல்லது அரசியல் ரீதியான கொலையா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சசிக்குமாரின் கொலையை பயன்படுத்தி கோவையில் மீண்டும் ஒரு கலவரத்தை ஏற்படுத்த இந்துமுன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் முயன்று வருவதாக பல்வேறு அமைப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சசிக்குமார் கொலையை தொடர்ந்து திருப்பூர், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சென்ற ஏராளமான பேருந்துகளின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. இன்று அதிகாலை முதல் கோவை மாநகரில் உள்ள முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கோட்டை மேடு, கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் கும்பலாக சென்று வன்முறையில் ஈடுபட்டனர். இதனையடுத்து எதிர்த்தரப்பினர் திரண்ட நிலையில் காவல்துறையினர் தலையிட்டு கும்பலை அங்கிருந்து கலைத்தனர். சிவானந்தா காலனி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட சங்பரிவார் கும்பலை படம் பிடித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. செல்போனில் படம் பிடித்தவர்களையும் அடித்து நொறுக்கினர். தொடர்ந்து கோவையின் பல்வேறு பகுதிகளில் இந்துமுன்னணியினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பிற்பகலில் பதட்டமான பகுதிகளில் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.