Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 3, 2017

பகல் (அ) இரவு எந்நேரத்தில் பால் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது?


காலை? மாலை? இரவு? பால் குடிப்பதால உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் புரதச்சத்து கிடைக்கிறது. ஆனால் எந்த நேரத்தில் பால் குடிப்பது உடல் நலனுக்கும், ஆரோக்கியத்திற்கும் சிறந்தது, எந்நேரத்தில் குடித்தால் நன்மைகள் முழுமையாக கிடைக்கப்பெறும் என உங்களுக்கு தெரியுமா?
காலை வேளையில் பால் குடிப்பதால் அன்றைக்கு தேவையான புரதச்சத்து உடலுக்கு கிடைக்கிறது.

தசைகளை பில்ட் செய்ய விரும்புவோர் அதிகாலை வேளையில் பால் குடிக்காலம்.

அதிலும் இரவு உணவுக்கு பிறகு 7-8 மணி நேரம் கழித்து குடிப்பது சிறந்தது.


இரவு படுக்கைக்கு செல்லும் முன் மிதமான சூட்டில் பால் குடிப்பது, மனதை அமைதியாக உணர வைக்கும். நல்ல உறக்கம் பெற உதவும்.

பாலில் இருந்து கிடைக்கும், அமினோ அமிலம், செரோடோனின் மற்றும் மெலடோனின் போன்றவை மூளையில் உறக்கம் பெற வைக்கும் சுரப்பியை ஊக்கவித்து நல்ல உறக்கம் அடைய வைக்கிறது.

ஆயுர்வேத முறைகளில் இரவில் பால் குடிப்பது தான் நல்லது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இரவில் அதிகமாக பால் குடிப்பது உடலில் கொழுப்பு சேர காரணியாக அமையலாம்.

உடல் பருமனாக இருப்பவர்கள், நீங்கள் கடைப்பிடிக்கும் டயட்டை வைத்து, பால் குடிக்கலாமா, இல்லையா என முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

சிலருக்கு இரவு பால் குடிப்பது செரிமான சிக்கல்கள் உண்டாக்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.