Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 7, 2016

சுவாதி கொலையாளிகள் குறித்த ஆதாரம் தம்மிடம் உள்ளது : திலீபன் மகேந்திரன்



மென்பொறியாளர் சுவாதி கொலையாளிகள் குறித்த ஆதாரம், தம்மிடம் உள்ளதாக அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட திலீபன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி கொலையில் சிலருக்கு தொடர்பிருப்பதாக கூறி பேஸ்புக்கில் நாகை மாவட்டத்தை சேர்ந்த திலீபன் மகேந்திரன் தகவலை பதிந்திருந்தார். இந்நிலையில் தம் மீது அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் திலீபன் மகேந்திரன், கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதனையெடுத்து சிறையிலிருந்து நிபந்தனை பிணையில் திலீபன் மகேந்திரன் இன்று விடுவிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறையில் மனநிலை பாதித்தவர்களோடு தம்மை அடைத்து வைத்து  போலீசார் கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டினார். மேலும் சுவாதி படுகொலை வழக்கின் உண்மையான குற்றாவளி யார் என்பதை கண்டிப்பாக அம்பலப்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.