உத்தரபிரதேசம்,புலாந்சாகர் என்எச்91 நெடுஞ்சாலையில் கங்கையில் புனித ஸ்நானம் முடித்துவிட்டு திரும்பியபோது கணவனை தா’கி அவரது 32வயது மனைவியை கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர்களது உறவினர் ஒருவர் கூறும்போது, எனது மாமாவும் அதையும் கங்கைக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர். பஜ்பூர் கணவாய் வழியாக திரும்பிக்கொண்டிருப்பதை என்னிடம் தெரிவித்தனர். நாங்கள் ஒரு அரை மணிநேரத்தில் வீடு வந்துவிடுவார்கள் என்று காத்திருந்தோம். ஆனால் அவர்கள் வரவில்லை. சந்தேகப்பட்டு நாங்கள் அப்பகுதிக்கு சென்று தேடிப்பார்த்தோம். இரவு நேரம் ஆனதால், தேட முடியவில்லை.
பின்னர் செல்போனில் தொடர்பு கொண்டோம். ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை. பின்னர்தான் ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்ற சந்தேகம் ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் நடக்கும் விபரீதங்கள் நன்றாகவே எங்களுக்கு தெரியும். அதனால் பயந்துபோய் தேடினோம்.
காட்டுப்பகுதியில் எனது அத்தை வாய் கட்டப்பட்டு கற்பழித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். எனது மாமா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவர் அலிகார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கும்பலாக வந்து மாமாவை கத்தியால் குத்திவிட்டு, அத்தையை கற்பழித்துள்ளனர். இப்பகுதியில் அடிக்கடி இப்படி கொலை,கொள்ளை என்று நடந்துகொண்டிருக்கிறது. போலீசார் இதுகுறித்து கண்டுகொள்வதே இல்லை என்று குற்றம்சாட்டினார்.
ஆனால் போலீசாரோ, நாங்கள் வழக்கு பதிவு செய்து கும்பலை தேடி வருகிறோம் என்று மட்டும் மிக சாதாரணமாக தெரிவித்தனர்.
பொதுமக்கள் கொந்தளித்துபோய் கூறும்போது இந்திய பெண்கள் பாதுகாப்பில்லாமல் பயந்த நிலையிலேயே உள்ளனர். ஆனால் நம் நாட்டின் பிரதமர் நாடு நாடாக உல்லாசமாக சுற்றிவருகிறார் என்று கவலையுடன் தெரிவித்தனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.