September 20, 2016
ராம்குமார் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தீ குளிப்போம் !! ராம்குமாரின் தாய்,
சுவாதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு நேற்று மர்மமான முறையில் உயிரிழந்த ராம்குமாரின் வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்படாவிட்டால் குடும்பத்துடன் தீ குளிக்க போவதாக ராம்குமாரின் தாய் மற்றும் அவரின் சகோதரி தெரிவித்துள்ளனர்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று மர்மான முறையில் புழல் சிறையில் உயிரிழந்தார், மின் கம்பியை கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் ராம்குமாரின் சொந்த ஊரில் ராம்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமாரின் தாயார் புஷ்பம், “எனது மகனை அநியாயமாக கொலை செய்து விட்டனர். அவன் தற்கொலை செய்திருப்பதுக்கு வாய்ப்பேயில்லை, எனது மகன் மரணம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் இல்லையென்றால் நாங்கள் நடுரோட்டில் குடும்பத்துடன் தீ குளித்து உயிரிழப்பதற்கும் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
ராம்குமார் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தீ குளிப்போம் !! ராம்குமாரின் தாய்,
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.