சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ராம்குமார் கடந்த ஞாயிறு அன்று மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் கடைசியாக அவர் பேசியது என்ன என்பது குறித்து சக கைதி ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஒரு விசாரணை கைதி ஒருவர் ராம்குமாரிடம் 'கவலைப்படாதே தம்பி, எனக்கும் உங்க ஏரியா தான். முதல் தடவை வரும் போது இதுமாதிரியாகத் தான் இருக்கும். நீ கொலை செய்யவில்லை என்றால் எதற்காக பயப்பட வேண்டும், இந்த வழக்கின் தீர்ப்பு உனக்கு சாதகமாகத்தான் வரும்' என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார்.
அப்போது, 'எனக்கும், இந்த கேஸிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுவாதி யார் என்றே தெரியாது. வெளியில் சென்ற பிறகு இந்த வழக்கில் என்னை எப்படி சிக்க வைத்தார்கள் என்பதை மீடியாக்களிடம் சொல்வேன்' என்று நம்பிக்கையுடன் ராம்குமார், அந்த கைதியிடம் சொல்லி இருக்கிறார். இதற்குள் அங்கு வந்த சிறைக்காவலர் ஒருவர், இருவரையும் எச்சரித்து விட்டு சென்றுள்ளார். ராம்குமார் மரணத்திற்கு முன்னர் கடைசியாக பேசியது இதுதான்


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.