September 22, 2016
ராம்குமாரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்வது தொடர்பான வழக்கு இன்று விசாரணை!
ராம்குமாரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்வது தொடர்பான வழக்கு, 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று விசாரணை வருகிறது.
ராம்குமாரின் பிரேதத்தை பரிசோதனை செய்வதில், தங்கள் தரப்பு மருத்துவரையும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி அவரது தந்தை பரமசிவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால், 3வது நீதிபதி இன்று நியமிக்கப்பட்டுள்ளார். 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் தங்கள் தரப்பு வாதத்தை இன்று வலுவுடன் முன்வைக்க உள்ளதாக ராம்குமாரின் தந்தை பரமசிவன் தரப்பு வழக்கறிஞர் சங்கர சுப்பு தெரிவித்துள்ளார்
ராம்குமாரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்வது தொடர்பான வழக்கு இன்று விசாரணை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 22, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 22, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.