Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 22, 2016

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு தாய் மனு



மனநலம் பாதிக்கப்பட்ட மகனை, கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் தாய் மனு அளித்தார்.
மகனுடன் வந்த தாய்
 கோவை சுக்கிரவார்பேட்டையை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 40). கணவர் இறந்து விட்டார். இவரது மகன் ஜெய்கணேஷ் (18). மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மணிமேகலை ஜெய்கணேசை அழைத்துக்கொண்டு வந்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.
அதன் பின்னர் மணிமேகலை நிருபர்களிடம் கூறியதாவது:-
மனநலம் பாதிப்பு
 எனது மகன் ஜெய் கணேசுக்கு 3 வயதாக இருக்கும்போது, மூளை காய்ச்சல் வந்தது. அதில் இருந்து மூளை வளர்ச்சி இல்லாமல் மனநிலை சரியில்லாமல் இருந்து வருகிறான். சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. லட்சக்கணக்கில் பணம் செலவு செய்தும் பலன் இல்லை.
இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் சென்னை கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தோம். அங்கு 2 மாதம் சிகிச்சை அளித்த பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை.
கருணை கொலைக்கு அனுமதி
 வீட்டில் உள்ள பொருட்களை ஜெய் கணேஷ் அடித்து உடைக்கிறான். நள்ளிரவில் கூச்சல் போடுகிறான். இதனால் மற்ற வீடுகளில் உள்ள குழந்தைகள் பயப்படுகிறார்கள். இதனால் நாங்கள் மிகுந்த மனவேதனையில் இருந்து வருகிறோம்.
எனவே என்னுடைய மகனை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும். டாக்டர்கள் மயக்க ஊசி செலுத்தி மகனை கருணை கொலை செய்தாலும் அதனை மிகுந்த சோகத்துடன் ஏற்றுக்கொள்கிறேன்.
இவ்வாறு தாய் மணிமேகலை கண்ணீருடன் கூறினார்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகள், இந்த மனு குறித்து கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், மகனை வீட்டில் கொண்டுபோய் வைத்து பராமரிக்குமாறும் கூறி அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.