Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 9, 2016

கர்நாடகாவில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்



கர்நாடகாவில் பணியாற்றி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டைக் கன்னட அமைப்பினர் முற்றுகையிட்டனர்.

கர்நாடகத்தின் கொப்பல் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் ராமச்சந்திரன். தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், காவிரி விவகாரம் தொடர்பான இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்றும், அவ்வாறு ஈடுபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனைக் கேள்விப்பட்ட கன்னட அமைப்பினர், தமிழகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி ராமச்சந்திரனின் வீட்டை முற்றுகையிட்டனர். இதையடுத்துப் போராட்டக்காரர்களிடம் பேச்சு நடத்திய ராமச்சந்திரன், தனது அறிவிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டதுடன், அதைவெளியிட்டதற்காக மன்னிப்பும் கோரினார். அதன்பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.