September 23, 2016
ராம்குமாரின் வாய் எரிந்திருக்க வேண்டும்: பிரபல மருத்துவர் தகவல்!
ராம்குமார் சிறையில் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தகவலில் பல்வேறு சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த சந்தேகங்களை தீர்க்கும் பிரேத பரிசோதனை இன்னமும் நடைபெறவில்லை.
இந்நிலையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களை பிரேதப்பரிசோதனை செய்த பிரபல உடற்கூறு மருத்துவர் டிகால் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராம்குமார் மின்சர ஒயரை கடித்து தற்கொலை செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை விளக்கியிருக்கிறார்.
ராம்குமார் மின் கம்பியைக் கடித்திருந்தால் அவரது வாய் எரிந்திருக்கனும். ஆனால் அவரது வாயில் எரிந்ததற்கான காயம் இல்லை என்கின்றனர். நீர் பதம் இருக்கும் சமயத்தில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.
மேலும் வாயின் உள்பகுதிக்குள் மின் கம்பியை அழுத்திக் கடித்திருந்தாலும், கால் வழியாக மின்சாரம் கடத்தப்பட்டு அந்த இடத்தில் காயம் கட்டாயம் ஏற்படும். மின் கம்பியைக் கடிக்கும்போது உடலின் உள் மின்சாரம் பாய்வதால் தோல் அதைத் தடுக்கும் வேலையில் ஈடுபடும் இதனால் உடலில் புண் ஏற்படுகிறது என மருத்துவர் டிகால் கூறியிருந்தார்.
ஆனால் மின்சார கம்பியை கடித்து இறந்ததாக கூறப்படும் ராம்குமாரின் உடலில் இந்தகைய காயங்கள் இருப்பதாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட சான்றிதழில் இல்லை.
ராம்குமாரின் வாய் எரிந்திருக்க வேண்டும்: பிரபல மருத்துவர் தகவல்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 23, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.