Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 14, 2016

திருமணத்துக்காக கட்டிய புடவையுடன் பெங்களூருவிலிருந்து நடந்தே வந்த மணப்பெண்


தமிழகத்தில் தனக்கு நிச்சயப்பட்ட தமிழ் மணமகனை மணப்பதற்காக கட்டியபுடவையுடன் பெங்களூருவில் இருந்து ஓசூர் வரை நடந்தே வந்துள்ளார் மணப்பெண்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு எதிரிப்பு தெரிவித்து பெங்களூருவில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் 60 பஸ்கள், 30-க்கும் மேற்பட்ட லாரிகள், கார்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
தமிழர்கள் நடத்தி வந்த கடைகள், அடித்து நொறுக்கப்பட்டன. இதையொட்டி நடந்த பயங்கர வன்முறையால்,  இருமாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஊடரங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.
இதற்கிடையே பெங்களூருவைச் சேர்ந்த ஆர்.பிரேமா(வயது25) என்பவருக்கும், வாணியம்பாடியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் நாளை திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், காவிரி பிரச்சினை காரணமாக, இரு மாநிலங்களுக்கும் இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், இவரால் தனது திருமணத்துக்கு செல்ல ஏற்பாடு செய்திருந்த வாகனம் உரிமையாளர்கள் தமிழகம் வரமுடியாது எனத் தெரிவித்து விட்டனர்.
இதையடுத்து, தனது திருமணம் நின்றுவிடும் என அச்சத்தில் கிடைத்த பஸ்ஸில் பிரேமா, கட்டியபுடவையுடன், கழுத்தில் நகைகளுடன்  தனது சொந்தபந்தங்களை அழைத்துக் கொண்டு பெங்களூருவில் இருந்து நேற்றுமுன்தினம் புறப்பட்டார்.
ஆனால், பஸ்  சில கிலோமீட்டர் சென்றுபின் கலவரம் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன்பின், ஒரு ஆட்டோவை எடுத்துக்கொண்டு, தனது பெற்றோருடன் புறப்பட்டு அதுவும் பாதியிலேயே நின்றுவிட்டது.

அதன்பின், அங்கிருந்து, தனது பெற்றோரை அழைத்துக்கொண்டு, தமிழக எல்லையான ஓசூர் வரை பிரேமா நடந்தே வந்துள்ளார். வாணியம்பாடியில் நாளை திருமணம் நடக்க இருக்க உள்ளநிலையில், ஓசூரில் தனது சொந்தபந்தங்கள் ஒன்று கூடியபின், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து மணப்பெண் பிரேமா கூறுகையில், “ பெங்களூருவில் ஏற்பட்ட வன்முறை காரணமாக எனது திருமணம் நின்றுவிடக்கூடாது என்பதற்காக, அங்கிருந்து ஒரு பஸ்,ஆட்டோ என மாறி மாறி ஓசூர் வரை வந்துவிடலாம் என நினைத்தோம். ஆனால், ஒசூர் கூட வரமுடியவில்லை. அங்கிருந்து நானும் எனது பெற்றோர்களும் ஏறக்குறைய 5 மணிநேரம் நடந்தே வந்து ஓசூர் வந்து சேர்ந்தோம். நாங்கள் திருமணத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியை தொலைத்துவிட்டோம். இந்த நாளை நான் மறக்கமுடியாது. 600 அழைப்பிதழ்கள் கொடுத்தநிலையில், 20 பேர் மட்டுமே வந்துள்ளனர். இருமாநில மக்களும் நடந்து கொள்ளும் முறை சரியல்ல. நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை உணர வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

மணப்பெண் பிரேமாவுடன் வந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன், சீர்வரிசை பாத்திரங்களுடன், பரிசுகளுடன் சாலையில் நடந்தே வந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.

காவிரி நீரை பகிர்ந்தளிப்பதில் கர்நாடாக மக்கள் நடந்து கொள்ளும் விதத்தால் இதுபோல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்களைக் கூட தொலைக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

அதேசமயம், தனக்கு நிச்சயக்கப்பட்டவரை திருமணம் செய்ய ஒரு பெண் நடந்தே வந்துள்ளது அவரின் மனவலிமையை காட்டுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.