Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 22, 2016

அப்துல் கலாம் பெயரில் அரசியல் கட்சி : இடைக்காலத் தடை நீக்கம்!



குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பெயரில் அரசியல் கட்சித் தொடங்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீக்கப்பட்டுள்ளது.

அப்துல்கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சி எனும் பெயரில் அரசியல் கட்சி தொடங்கி இருந்தார். இதனையடுத்து, அப்துல்கலாமின் பெயரில் அரசியல் கட்சி தொடங்க தடை விதிக்க வேண்டும் என கோரி கலாமின் சகோதரர் முகமது முத்து மீரான் மறைக்காயர் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்துல் கலாம் பெயரை அரசியல் கட்சிக்கு பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சி சார்பில்,  பொன்ராஜ் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்பு கடந்த ஜூலை 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் முதன்மை செயலாளர் வரிந்தர் குமார் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தேசிய தலைவர்கள் பெயரை அரசியல் கட்சிக்கு பயன்படுத்துவதை தடுக்க முடியாது என்றும், தேசிய தலைவர்களை தனி நபர்கள் உரிமை கோர முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், அப்துல் கலாமின் பெயர், புகைப்படத்தை அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.