September 28, 2016
எங்களை அடைத்து வைத்துவிட்டு ராம்குமாரை கொன்னுட்டாங்க !! புழல் கைதியின் பகீர் வாக்குமூலம்…
புழல் சிறையில் கடந்த வாரம் மர்மமான முறையில் உயிரிழந்த ராம்குமார் மரணத்தில் நாளுக்கு நாள் சர்ச்சை நீடித்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் மற்ற கைதிகளை அடைத்து வைத்துவிட்டு ராம்குமாரை கொலை செய்து விட்டதாக புழல் சிறை கைதி ஒருவர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ் வார இதழ் ஒன்று நடத்திய விசாரணையில் புழல் சிறையில் ராம்குமாருடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக கைதி ஒருவர் வழக்கமா 5 மணியிலிருந்து 5:45 மணிக்குத்தான் எங்களை செல்லுக்குள்ள வெச்சு பூட்டுவாங்க. ஆனா, அன்னைக்கு திடீர்னு வந்த வார்டன்கள் “உள்ள போ……உள்ள போ…’ன்னு’ 3:45 மணிக்கே பூட்டிட்டாங்க.
என்னமோ நடக்கப்போகுதுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தோம். சுமார் 4:30 மணி இருக்கும். ஒரே கூட்டம். ராம்குமாரை ஸ்ட்ரெச்சர்ல வெச்சு டிஸ்பென்சரியை நோக்கித் தள்ளிக்கிட்டுப் போனாங்க.
கொஞ்சநேரத்துல, ராம்குமார் கரண்ட் ஒயரை கடிச்சு செத்துட்டான்னு சிறை முழுக்க நியூஸ் பரவ ஆரம்பிச்சுடுச்சு. எங்களைப் பூட்டி வச்சிட்டு அந்தப் பையனை முடிச்சிட்டாங்க என்றும் அந்த கைதி தெரிவித்துள்ளதாக அந்த வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் ராம்குமார் கொலையான அடுத்த தினத்திலிருந்து மூன்று நாட்கள் எப்பொழுதும் வழக்கமாக வரும் தினத்தந்தி செய்திதாள் கூட வரவில்லை என்றும் மேலும் மூன்றாவது நாள் வந்த செய்தி தாளிலும் ராம்குமார் மரணம் குறித்த செய்திகள் அனைத்தையும் கிழித்துவிட்டு தான் போலீஸார் செய்திதாளை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எங்களை அடைத்து வைத்துவிட்டு ராம்குமாரை கொன்னுட்டாங்க !! புழல் கைதியின் பகீர் வாக்குமூலம்…
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.