Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 14, 2016

பிராமணர் உண்ட இலையில் உருளும் மனிதநேயமற்ற வழக்கத்திற்கு தடை?



பிராமணர் உண்ட இலையில் உருளும் மனிதநேயமற்ற வழக்கத்தை தடைசெய்யுமாறு உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்திலும், கர்நாடகத்திலும் 500 வருடங்களாக கடைபிடிக்கப்படும் ஒரு வழக்கம், பிராமணர்கள் சாப்பிட்டு விட்டு எழுந்த இலைகளின் மீது தலித்துகள் உருண்டால், தோல் வியாதிகள், திருமணத் தடை, குழந்தையின்மை ஆகியவை நீங்கும் என்று கூறப்பட்டு வந்த நம்பிக்கைகளுடன் தொடரும் மனிதத்தன்மையற்ற வழக்கத்தை, உச்சநீதிமன்றம் தடை செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமூக நீதி அமைச்சகம், இந்த வழக்கத்தை ”மனிதநேயமற்றது எனவும், மூடவழக்கம் என்றும்” குறிப்பிட்டு, மனிதர்களின் சுயமரியாதையை இழக்கும் செயலாகவும், உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இத்தகைய செயல்களை நடைமுறைப்படுத்துபவர்கள், இது சாதிக் கொடுமை இல்லையென்றும், தானாக அவர்கள் இதை மேற்கொள்வதாகவும் கூறுகின்றனர். கர்நாடகாவில், நவம்பர்-டிசம்பர் மாதங்களில், தென் கனரா மாவட்டத்தில், குக்கே சுப்ரமணியாவில் மூன்று நாட்கள் விழாவில் இத்தகைய வழக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், கரூர் மாவட்டத்தில், நேரூர் சதாசிவ பர்மேந்திரை கோவிலின் ஆராதனைத் திருவிழாவில் இத்தகைய மனிதநேயமற்ற செயல் கடைபிடிக்கப்படுகிறது. இது சட்டத்தின், சம உரிமை, நீதி, சுயமரியாதை ஆகிய மூன்றுக்கும் எதிராக உள்ளதால், மத சுதந்திரத்தை வலியுறுத்தும் article 25 -இன் கீழ் இதைக் கொண்டுவந்துவிடக்கூடாது என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

2011-இல், கர்நாடக நீதிமன்றம் இந்த வழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. கோவிலுக்கு வெளியில் வாழை இலையில் உணவு பரிமாறப்படும். விரும்புவர்கள் யார் வேண்டுமானாலும் அதில் உருண்டு கொள்ளலாம் என மாற்றியமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.