Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 7, 2016

காணாமல்போன வர்த்தகர் மறைந்திருந்தபோது கைது…!!



திருகோணமலை பகுதி வங்கி ஒன்றுக்கு சென்றிருந்த வேளையில் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட வர்த்தகர் ஹப்புத்தளை ஹல்துமுல்லையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பண்டாரகம, அடுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரே நேற்றைய தினம் மறைந்திருந்த போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தகர் நண்பர் ஒருவருக்கு எடுத்த தொலைபேசி அழைப்பினை பரிசீலித்தே குறித்த வர்த்தகரை கைது செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பண்டாரகம, அடுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மொஹமட் நஸ்ரின் என்னும் வர்த்தகர் காணாமல்போனதாக வர்த்தகரின் தந்தை பண்டாரகம பொலிஸில் கடந்த திங்கட்கிழமை முறைப்பாடு செய்திருந்தார்.
இதையடுத்து குறித்த வர்த்தகர் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் 23 பேரிடம் வாக்குமூலம் பெற்று விசாரணைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.