September 19, 2016
ராம்குமாரின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை நடத்துவதற்கு அவரது பெற்றோர் அனுமதி மறுப்பு
புழல் சிறையில் உயிரிழந்த ராம்குமாரின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை நடத்துவதற்கு அவரது பெற்றோர் தரப்பில் அனுமதி மறுத்துள்ளனர்.
மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் நேற்று மாலை மின்வயரைக் கடித்து மின்சாரத்தை உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை சார்பில் கூறப்படுகிறது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்த நிலையில் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ராம்குமாரின் உடலுக்கு, நீதித்துறை நடுவர் முன்னிலையில் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதனிடையே, தங்கள் தரப்பு மருத்துவரையும் பிரேதப் பரிசோதனை குழுவில் அனுமதிக்க வேண்டும் என ராம்குமாரின் பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் நீதித்துறை நடுவர் தமிழ்செல்வி விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
ராம்குமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என ராம்குமாரின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்
ராம்குமாரின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை நடத்துவதற்கு அவரது பெற்றோர் அனுமதி மறுப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.