Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 15, 2016

மக்கள்குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது மிளகாய் பொடி வீசி தாக்குதல்



உத்தரபிரதேசம் மாநிலத்தில் மக்கள்குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது மிளகாய் பொடி வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.



மொசாபர்பூர் மாவட்டம் காந்தி நகரில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. கபில்தேவ் அகர்வால் வீட்டில் மக்கள் குறை கேட்டார். அவரை பார்க்க கட்சி தொண்டர்கள் வந்தபடி இருந்தனர். இந்த நிலையில் 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் எம்.எல்.-ஏ.விடம் மனு கொடுத்து பேசிக் கொண்டு இருந்தனர். திடீரென அவர்கள் எம்.எல்.-ஏ. மீது மிளகாய் பொடியை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

இதில், அவரது கண்களில் மிளகாய் பொடிபட்டது. இதனால் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு துடித்தார். இந்த நேரத்தில் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். எதற்காக அவர்கள் மிளகாய் பொடி வீசினார்கள்? என்பது தெரியவில்லை.



இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் பெயர் தெரியவந்தது. பியானா கிராமத்தை சேர்ந்த கபில் என்று அடையாளம் கண்டுபிடித்தனர். ஆனால், 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். எம்.எல்.ஏ. கபில் தேவ் அகர்வாலுக்கு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதிப்பு எதுவும் உள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறிஉள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.