September 22, 2016
மோடியின் தெருப்பெயரை மாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி நகராட்சி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமர் மோடி வசிக்கும் அதிகாரப்பூர்வ அரசு இல்லம் அமைந்திருக்கும் ரேஸ் கோர்ஸ் சாலையின் பெயரை லோக் கல்யாண் மார்க் என மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “ரேஸ் கோர்ஸ் சாலை இன்று முதல் லோக் கல்யாண் மார்க் என அழைக்கப்படும்'' என்று தெரிவித்தார். விரைவில் புதிய பெயருடன் கூடிய பெயர் பலகை பிரதமர் இல்ல சாலையை அலங்கரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஸ் கோர்ஸ் சாலையை “ஏகாத்மா சாலை” என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மோடியின் தெருப்பெயரை மாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 22, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 22, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.