September 26, 2016
காஸ்மீரில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க முடியாது – ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் அறிவிப்பு
காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரும் மனுவை அந்த மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காஷ்மீரில் ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 11 வரை இந்திய இராணுவத்தினால் 13 லட்சம் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று சிஆர்பிஎப்( CRPF ) எனும் மத்திய இராணுவப் பிரிவு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பெல்லட் குண்டுகள் பயன்பாட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஜம்மு- காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, சிஆர்பிஎப் உயர்நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியது.
பாயிண்ட் 9ஆம் எண் வகையைச் சேர்ந்த, ஒரு பெட்டியில் 450 உலோக உருண்டைகள் கொண்ட 3765 பெட்டிகள் (கூடுகள்) பயன்படுத்தப்பட்டன என்று கூறிய சிஆர்பிஎப், இந்த அளவு பயன்படுத்தியபிறகும்கூட, கலவரப் பகுதிகளில் மக்கள் கூட்டத்தைப் போதிய அளவு கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
ஆபத்தான, ஆபத்தில்லாத 14 வகை ஆயுதங்கள் உட்பட 8650 கண்ணீர் புகை குண்டுகள், 2671 பிளாஸ்டிக் பெல்லட்டுகள் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எனவே போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரும் மனு ஜம்மு- காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி என். பால் வசந்தகுமார் மற்றும் நீதிபதி அலி முகமது மக்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ஜம்மு- காஷ்மீரில் கட்டுக்கடங்காத பெல்லட் ரக துப்பாக்கிகளுக்குத் தடை கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேவேளையில், பெல்லட் ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்த உத்தரவிட்ட அதிகாரிகள் மீதும், பயன்படுத்தியவர்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவும் நிராகரிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
பெல்லட் ரக துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்தவர்களுக்கு உரிய அனைத்து வகையான சிகிச்சைகளும் மருத்துவ சிறப்பு நிபுணர்களால் அளிக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
காஸ்மீரில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க முடியாது – ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் அறிவிப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.