Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 4, 2016

அயோத்தியில் கோவில் நிலத்தில் மசூதி கட்டுவதற்கு அனுமதி



அயோத்தியில் கோவில் நிலத்தில் மசூதி கட்டுவதற்கு அனுமதி

அயோத்தி,மத நல்லிணக்கம் ஒரு சிறந்த உதாரணத்தை அமைக்கும் வகையில், அயோத்தில் உள்ள இந்து கோயில், தன்னுடைய நிலத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, சிதிலமடைந்து வரும் மசூதியை கட்டுவதற்கு அனுமதி வழங்கிஉள்ளது.உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது இந்தியா முழுவதும் மத கலவரத்திற்கு வழிவகைசெய்தது.

இப்போது 2016-ம் ஆண்டு ஹனுமன்கார்கி கோயில் அறக்கட்டளை, அலம்கிரி மசூசுதியை மீண்டும் கட்டுவதற்கு அனுமதி மட்டும் வழங்கவில்லை, அதற்கு ஆகும் முழு செலவையும் தாங்களே ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டு உள்ளது. உள்ளூர் மாநகராட்சி, 17-ம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் அவுரங்கசிப் ஒப்புதலில் கட்டப்பட்ட அலம்கிரி மசூதி அபாயகரமான நிலையில் உள்ளது என்று அறிவித்து உள்ளது. மசூதி கட்டிடத்திற்குள் பிரவேசிக்க மாநகராட்சி தடை விதித்து உள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது.

ஹனுமன்கார்கி கோயில் அறக்கட்டளை தலைமை பூசாரி மஹந்த் கியான் தாஸ் பேசுகையில், “எங்களுடைய செலவில் மசூதியை மீண்டும் புணரமைக்க எங்களுடைய இஸ்லாமிய சகோதரர்களிடம் கேட்டுக் கொண்டு உள்ளேன், இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சான்றிதழ் வழங்கி உள்ளோம்,” என்று கூறிஉள்ளார். கடந்த 1765-ம் ஆண்டில் மசூதி அமைந்திருக்கும் இடத்தின் உரிமையை ஹனுமன்கார்கி கோயில் அறக்கட்டளை பெற்றது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.