September 7, 2016
பேருந்துகள் லாரிகளை கடத்தி விற்பனை செய்த அஜீத்குமார் என்பவர் கைது!
புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் பல பேருந்துகள், லாரிகளைக் கடத்தி விற்பனை செய்துவந்த இளைஞரை, முதலியார்பேட்டை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெரியபட்டு கிராமத்தைச் சேர்ந்த அஜீத்குமார் என்பவர், கடலூர், விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகளை கடத்தி விற்பனை செய்துவந்தார்.
இது தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு பல முறை சிறை சென்றுவந்த அஜீத்குமார் மீண்டும் இதே குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரி முதலியார்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நின்ற பேருந்தை கடத்த முயன்ற அஜீத்குமாரை, பங்க் ஊழியர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த முதலியார்பேட்டை போலீசார், அஜீத்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பேருந்துகள் லாரிகளை கடத்தி விற்பனை செய்த அஜீத்குமார் என்பவர் கைது!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.