September 24, 2016
கஞ்சா கருப்பு மீது பெண் இயக்குனர் போலீசில் புகார்
காமெடி நடிகர் கஞ்சா கருப்பு சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் தனது முன்னாள் மானேஜர் வி.கே.சுந்தர் என்பவர் தன்னை ஏமாற்றி 4 கோடி ரூபாயை எடுத்துக் கொண்டார் என்றும். அவரது மனைவியும் கள்ளன் பட இயக்குனருமான சந்திராவும் இந்த மோசடிக்கு உடந்தை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். கஞ்சா கருப்புவின் இந்த குற்றச்சாட்டை எதிர்த்து இயக்குனர் சந்திரா விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனக்கும் எனது கணவர் திரு வீ.கே.சுந்தருக்கும் 19995 ல் திருமணம் ஆனது முதல் நான் சென்னையில் வசித்து வருகிறேன். முதலில் பத்திரிகைத்துறையில் செய்தியாளராக பணியாற்றி பின்னர் திரைப்படத்துறையில் பணியாற்றி வந்தேன். நான் தற்போது 'கள்ளன்' என்ற திரைப்படத்திற்கு கதை.திரைக்கதை.வசனம் ஆகிய பணிகளை ஏற்று அப்படத்தை இயக்கி முடித்துள்ளேன். படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டுமின்றி நான் தமிழ் எழுத்தாளராகவும் உள்ளேன். நான் எழுதிய நூல்கள் பல்வேறு புகழ் பெற்ற பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு பெண்ணிய அமைப்புகளோடும், சமூக அமைப்புகளோடும் இணைந்து சமூக பணிகளையும் செய்து வருகிறேன்.
கஞ்சா கருப்பு என் கணவர் வீ.கே.சுந்தர் பற்றியும் அவரது நண்பர்கள் மற்றும் சில பொதுநபர்களைப் பற்றியும் பொய்யான,தவறான,உண்மைக்கு மாறான அவதூறான செய்திகளை அளித்துள்ளார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த அவமானத்திற்கும் அவமரியாதைக்கும் ஆளாகியுள்ளோம். மேலும் அது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும் தாங்க இயலாத துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்று அந்த மனுவில் இயக்குனர் சந்திரா தெரிவித்திருக்கிறார்.
கஞ்சா கருப்பு மீது பெண் இயக்குனர் போலீசில் புகார்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 24, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.