September 7, 2016
பணம் இல்லாததால் மனைவியின் உடலை குப்பைகளை கொண்டு எரிந்த கணவன்!
போபாலில் சுடுகாட்டில் அனுமதி மறுக்கப்பட்டதால் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் தனது மனைவியின் உடலை குப்பைகளை கொண்டு எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபால் அருகே நீமுச் என்ற கிராமத்தை சேர்ந்த பழங்குடி இனத்தவர் ஜகதீஸ் பில். இவரது மனைவி நோஜி பாய் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மரணமடைந்தர்.
இந்நிலையில் ஜகதீஸ் பில் தனது மனைவியின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்ற போது அவரிடம் உடலை எரிக்க 2,500 ரூபாய் பணம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அவரிடம் பணம் இல்லாத காரணத்தினால் பொது இடத்தில் வைத்து 3 மணிநேரமாக குப்பைகளை சேர்த்து தனது மனைவியின் உடலை எரித்துள்ளார்.
உத்திரபிரதேசத்தில் இறந்த தனது குழந்தையை எடுத்துச் செல்ல பணம் இல்லாத காரணத்தினால் மருத்துவமனை வாயிலில் ஒரு பெண் காத்திருந்த சம்பவமும், ஒடிசாவில் இறந்த மனைவியின் உடலை பணம் இல்லாத காரணத்தினால் கணவர் தூக்கிச் சென்ற சம்பவமும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணம் இல்லாததால் மனைவியின் உடலை குப்பைகளை கொண்டு எரிந்த கணவன்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.