September 8, 2016
டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து மதுபான பாட்டில்கள் கொள்ளை!
தேனி மாவட்டம் கடமலைகுண்டு அரசு மதுபான கடையில் தீ வைத்து, மர்ம நபர்கள் மதுபான பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தேனி மாவட்டம் கடமலைகுண்டு பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் நள்ளிரவில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடையின் பூட்டை உடைத்து மதுபான பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மதுபான கடையின் வெளிப்புறத்தில் இருந்த பேனர் மற்றும் முன்புற கதவுகளில் தீ வைத்து விட்டு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதில் ஏராளமான மதுபான பாட்டில்கள் எரிந்து சாம்பலாயின.
மேலும், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து மதுபான பாட்டில்கள் கொள்ளை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 08, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 08, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.