September 26, 2016
கட்டாய திருமணம் செய்து கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கட்டாய திருமணம் செய்து கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமையை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர் அருகே தாரமங்கலம் அடுத்த அமரகுந்தி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர், உறவினரின் பெண் ஒருவரை கடத்தி கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் தொளசம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து ஜலகண்டபுரத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சுரேஷை போலீசார் கைது செய்தனர்.
சுரேஷ் மீது இளம் பெண் கடத்தல், பாலியல் வன்கொடுமை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
கட்டாய திருமணம் செய்து கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.