நாம் தமிழர் கட்சி சார்பில், சென்னையின் பல பகுதிகளில் உள்ள கன்னடர்களுக்கு சொந்தமான ஓட்டல்கள்,பேக்கரிகளை பூட்டு போடும் போராட்டம் நடந்தது. ஓட்டல் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
சென்னையில் பல இடங்களில் கன்னடர்களுக்கு சொந்தமான ஓட்டல்கள், பேக்கரிகளை தாக்கிய நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மயிலாப்பூரில் கன்னடர்களுக்கான ஓட்டல்கள், பேக்கரிகள் உள்ளன. இங்கு இன்று மதியம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஸ்டாலின் தலைமையில் 16 பேர் சென்றனர்.
அவர்கள், கர்நாடக அரசை கண்டித்தும், பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர், மேற்கண்ட கடைகளை மூட வேண்டும் என கூறி தாக்குதல் நடத்தினர்.
தகவலறிந்து மயிலாப்பூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, 16 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல், வேளச்சேரி 100அடி சாலையில் உள்ள சங்கீதா ஓட்டலுக்கு, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் இன்று மதியம் சென்றனர். திடீரென அவர்கள், கற்களை எடுத்து ஓட்டல் மீது சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில், ஓட்டலில் இருந்த பொருட்கள் கடும் சேதம் அடைந்தன. பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதுதொடர்பாக வேளச்சேரி போலீசார், வழக்குப்பதிவு செய்து, தப்பியோடியவாகளை தேடி வருகின்றனர்.
மேலும் சிந்தாதிரிபேட்டையில் உள்ள முருடிஸ் ஓட்டலுக்கு, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிவகுமார் தலைமையில் 16 பேர் பூட்டு போட முயன்றனர். அவர்களை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.