September 4, 2016
நாட்டிலேயே உத்தரபிரதேச மாநிலத்தில்தான் தலித்கள் மீதான தாக்குதல் வழக்கு அதிகம்
நாட்டிலேயே உத்தரபிரதேச மாநிலத்தில்தான் தலித்கள் மீதான தாக்குதல் தொடர்பாக 8,400 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகமான NCRB தெரிவித்துள்ளது.
2015-ம் ஆண்டு நாடு முழுவதும் தலித்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்த அறிக்கை ஒன்றை தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் 2014ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2015ம் ஆண்டு தலித்கள் மீதான தாக்குதல்கள் 4.4 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2014ம் ஆண்டு 47,064 ஆக வழக்குகள், 2015ம் ஆண்டு 45,003 குறைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் உத்தரபிரதேச மாநிலத்தில் தான் தலித்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக 8,358 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம் கூறியுள்ளது.
ராஜஸ்தானில் 6,998 வழக்குளும், பீகாரில் 6,438 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 6,415 வழக்குகளும், தமிழகத்தில் 1,782 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
நாட்டிலேயே உத்தரபிரதேச மாநிலத்தில்தான் தலித்கள் மீதான தாக்குதல் வழக்கு அதிகம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 04, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 04, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.