இந்து முன்னணி பிரமுகர்கள் மீதான தொடர் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாரதிய ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இதனை கண்டித்தும், இந்து முன்னணி பிரமுகர்கள் மீதான தொடர் தாக்குதலை கண்டித்தும் சென்னை எழும்பூரில் பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். எனினும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாரதிய ஜனதா தொண்டர்களை போலீசார் தடுத்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன், ஹெச். ராஜா, மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறி போலீசார் இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.