Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 30, 2016

முடிவு எடுக்கப்படாமல் முடிந்த காவிரி விவகார கூட்டம்.



சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் தலைமையில் தமிழகம், கர்நாடக ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடந்தது.

இந்த கூட்டத்தில் தமிழக முதல்வரின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், கர்நாடகத்தின் சார்பில் முதல்வர் சித்தராமையாவும் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர் உமாபாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:“ தமிழகத்திற்கு நீர் திறக்க முடியாது என்று சித்தராமையா கூறியிருந்தார். நீர் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா கோரினார். தமிழகத்திற்கு நீர் திறக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண முடியவில்லை. இரு தரப்பு கருத்துக்களும் உச்ச நிதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.