Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 6, 2016

வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக பழங்குடியின மக்கள் புகார்!



திண்டுக்கல் மாவட்டம் சாமிமலை வனப்பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து, அடிப்படை வசதிகளின்றி தங்க வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அவர்களுடைய நிலை என்ன என்பதை இனி காண்போம்.
திண்டுக்கல் மாவட்டம் சுவாமி மலையில் வசித்து வந்த மலைவாழ் மக்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை அதிகாரிகள் மண்திட்டு என்ற பகுதியில் குடியேற்றி உள்ளனர்.  உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று அதிகாரிகள் அளித்த உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.  ஆண்டுகள் பல கடந்தும் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி வாழ்வதாகக் கூறுகின்றனர் மலை வாழ் மக்கள்.
மலைப் பகுதியில் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்த மக்கள், இப்போது மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கூட இன்றி அல்லல் படுகின்றனர். மலைவாழ் குழந்தைகள் படிப்பதற்கென தொடங்கப்பட்ட சிறப்புப் பள்ளியும் தற்போது செயல்படவில்லை என்பது இவர்களின் பெரிய குறை.
மலையில் விளையும் தினை, கடுக்காய், தேன், கிழங்குகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து நகரில் விற்று வந்த மலைவாழ் மக்கள், இப்போது தினசரி வாழ்க்கையை நடத்தவே திண்டாடுகின்றனர். கட்டாய குடியேற்றத்தின் துயரங்களை விவரிக்கும் அவர்களுடைய கருத்துக்களை இனி காண்போம்.
நாகரிக வாழ்க்கையைக் காட்டுவதாக மலைப்பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுடைய பிரச்னைகளை களையப்பட  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.