Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 30, 2016

நவாஸ் ஷெரீப்புக்கு அரசாங்கம் நடத்த துப்பில்லை”:இம்ரான் கான் கடும் தாக்கு



பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு இந்தியாவிற்கு எதிரான பிரச்சனையை எப்படி கையாள்வது என தெரியவில்லை என தெரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் எல்லையில் புகுந்து இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதல் நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்தியாவின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் தக்க பதிலடி தரவில்லை என அந்நாட்டு எதிர்க் கட்சிகள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் முக்கிய கட்சியான தெரீக்-இ-இன்சாப் கட்சி தலைவரும்,முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான்,பாகிஸ்தான் அரசை வழி நடத்த நவாஸ் ஷெரீப் லாயக்கற்றவர் என விமர்சித்துள்ளார்.
”இந்திய ராணுவம் எல்லை தாண்டி நடத்தியுள்ள இந்த தாக்குதலுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு நான் அறிவுரை வழங்கப் போகிறேன்.அதே போல் இந்த தாக்குதலுக்கு நம் நாட்டின் பதில் என்ன என்பதை இந்திய பிரதமர் மோடிக்கு நாளை நான் செய்தி அனுப்ப போகிறேன்.”என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் ஒற்றுமையை உலகத்திற்கு தெரியும் வகையில் ஒரு பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ள அவர்,அந்த பேரணியில் பாகிஸ்தானின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்புக்கு எப்படி அரசை வழிநடத்துவது என தெரியவில்லை.இப்போது பாகிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருப்பது பாகிஸ்தான் ராணுவத் தளபதியான ரஹீல் தான்.” என அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.