September 12, 2016
கன்னடர்களின் இனவெறி தாக்குதலுக்கு ஏட்டிக்கு போட்டி: தமிழ் அமைப்பினர் பதில் தாக்குதல்!
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர் மீது இனவெறி ரீதியில் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், பதிலடி தரும் வகையில் தமிழகத்திலும் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் தமிழர் தேசிய முன்னணி கட்சியினர் கர்நாடக பதிவு எண் கொண்ட கார் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நிகழ்த்தினர். கார் கண்ணாடிகளை அடித்து உடைத்த அவர்கள், காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிராக தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து, அதே பகுதியை சேர்ந்த கர்நாடகாவை சேர்ந்தவர் மீது தாக்குதல் நிகழ்த்தியவர்கள், “காவிரி தமிழர்களுக்கே” என்று கோஷம் எழுப்பக் கோரி அந்த நபரை வற்புறுத்தினர்.
காவிரியில் தமிழகத்திற்கு 15,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அம்மாநிலத்தில் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என கட்சி பாகுபாடு இன்றி குரல் கொடுக்கப்பட்டதுடன், போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய கன்னட அமைப்பினர், தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மீதும் தாக்குதல் நிகழ்த்தினர். “ஜெய் கர்நாடகா மாதா” என கூறச்சொல்லி தமிழ் இளைஞரை அடித்து துன்புறுத்தும் காட்சியினை செல்போனில் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னட அமைப்பினரின் இனவெறி தாக்குதல் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் இனவெறி தாக்குதலுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், தற்போது கன்னட இனவெறியர்களின் செயலுக்கு பதிலடி தரும் வகையில் தமிழகத்திலும் இத்தகைய தாக்குதல்கள் நிகழத் தொடங்கியுள்ளன.
இரு மாநிலங்கள் இடையிலான பிரச்சனையில் மத்திய அரசு மௌனம் காக்கும் நிலையில், இருமாநிலங்களிலும் நிகழும் இன ரீதியிலான தாக்குதல்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை வருத்தமடைய செய்துள்ளது. தேச ஒற்றுமைக்கு பங்கத்தை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரத்தில் இனியும் மௌனம் சாதிக்காமல் சட்டத்திற்கு உட்பட்டு, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கன்னடர்களின் இனவெறி தாக்குதலுக்கு ஏட்டிக்கு போட்டி: தமிழ் அமைப்பினர் பதில் தாக்குதல்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 12, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 12, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.