Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 9, 2016

ஒருதலைக்காதலால் விபரீதம்: பள்ளி மாணவியின் தாயை வெட்டிவிட்டு தப்பிய இளைஞர்



சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்தவர், பெண்ணின் தாயை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் காரியபெருமாள்கோவில் குளக்கரையில் வசிக்கும் கணபதி என்பவரின் மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாணவிக்கு ஒருதலை காதல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரையடுத்து போலிசார் செந்தில்குமாரை எச்சரித்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை மாணவியின் வீட்டுக்கு சென்ற செந்தில்குமார் மாணவியை திருமணம் செய்துதரும்படி மாணவியின் தாய் ஜெயாவிடம் கேட்டுள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து செந்தில்குமார் ஜெயாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். ஆபத்தான நிலையில் ஜெயாவை மீட்ட உறவினர்கள் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.