Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 20, 2016

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தவர் காவல் நிலையத்தில் சரண்!



வேலூர் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து காவல் நிலையத்தில் சரணடைந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த மண்டப காலணி பகுதியை சேர்ந்த பசுபதிக்கும், அவரது மனைவி முத்துலட்சுக்கும் கடந்த சில தினங்களாக கருத்துவேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் இருந்த முத்துலட்சுமியை கத்தியால் பசுபதி சரமாரியாக குத்தி கொலை செய்தார். பின்னர், பசுபதி தாமாக முன்வந்து சிப்காட் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து, சிப்காட் காவல்துறையினர்  முத்துலட்சுமியை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.