Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 9, 2016

சென்னையில் திமுக பெண் பிரமுகர் வெட்டிக் கொலை!



சென்னை கொருக்குப்பேட்டையில் திமுக பெண் பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொருக்குப்பேட்டையை அடுத்த கிருஷ்ணப்ப தோட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி. திமுக மகளிர் அணி பிரமுகரான இவர், வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்த லட்சுமியை, நான்கு மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், படுகாயம் அடைந்த லட்சுமியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இக்கொலை சம்பவம், கொருக்குப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.