Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 1, 2016

இன்று அதிகாலை முதல் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு



சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால் இன்று அதிகாலை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
எனவே இன்று முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.38-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2.67-ம் உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட பின்னர் டெல்லியில் இன்று அதிகாலை முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.63.47-க்கு (பழைய விலை ரூ.60-09) விற்பனை செய்யப்படும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது. இதேபோல் டீசல் விலை ரூ.50.27-ல் இருந்து ரூ.52.94 ஆக உயர்த்தப்படும்.
ஆனால் நேற்று கமாடெட்டி சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. வீழ்ச்சியடைந்த அன்றே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.