Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 7, 2016

அடப்பாவிகளா அங்கேயே கடத்திட்டிங்களா? ஆப்ரிக்காவில் சக்கை போடு போடும் அம்மா பேக்...!!!



முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகள் செய்தார். அதில் ஒன்று இலவச சீருடை பள்ளி பாட புத்தகங்கள் இன்னும் பல , அப்படி கொடுக்கப்பட்ட அம்மா பேக்கை ஆப்ரிக்காவுக்கு கடத்தி சென்று அங்கே விற்பனையும் செய்வது படத்துடன் பரவலான செய்தியாகி வருகிறது.

முதல்வர் ஜெயலலிதா பள்ளிச்செல்லும் மழலைகள் முதல் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பயன் தரும் பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார். அதில் பள்ளி சீருடை, இலவச காலணி, பாடபுத்தகங்கள் , இலவச புத்தகபை , இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், கல்வி உதவித்தொகை, மடிக்கணினி வழங்கினார்.

இதனால ஏழை மாணவர்கள் கல்வி கற்பதில் தடையில்லாத நிலை ஏற்பட்டது. இதில் இலவச மடிக்கணினி திட்டத்தை எதிர்கட்சிகளே பாராட்டும் நிலை ஏற்பட்டது. இந்த திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின் பற்றுகின்றன.

இதில் இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினி உள்ளிட்டவைகளை வெளியே கடத்தி விற்பதும் நடக்கிறது. அரசு இலவசமாக வழங்கும் பொருட்களான அரிசி , இலவச வேட்டி சேலைகளை கூட கேரளா, ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி விற்பதை பார்க்கிறோம்.

ஆனால் ஆப்ரிக்காவிற்கே கடத்தி சென்று விற்பனை செய்ததை பார்த்ததுண்டா. ஆப்ரிக்க நாட்டில் தமிழக அரசு வழங்கும் இலவச ஸ்கூல் பேக் முதலவர் ஜெயலலிதா படத்துடன் ரூ. 130 க்கு விற்பனை ஆகிறதாம். அதை அங்குள்ள பெண்கள் வாங்கி பயன் படுத்துகின்றனர். இந்த புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.