Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 29, 2016

பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி?


ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினான்
 காதல் மன்னன் பற்றி பெண் புகார்

சென்னை : காதலுக்கு சம்மதிக்காத பெண்களை மோசடி வாலிபன் சாமுவேல், தன் நண்பர்கள் துணையுடனும் பெண்களை ஏமாற்றியும், தன் கையை பிளேடால் கிழித்தும் ஏமாற்றி உள்ளான். அதை உண்மை என்று நம்பிய பெண்களை ஆபாச படம் எடுத்து ரூ.10 லட்சம் கேட்டும் மிரட்டினான் என்று பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையை ேசர்ந்த பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: என் பெயர் ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிபிஏ பட்டதாரியான நான் சில நாட்களாக பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தேன். அப்போழுது சாமுவேல் என்னை பின் தொடர்ந்து, ‘உன்னை காதலிக்கிறேன்’ என்று ஒரு மாதமாக தொந்தரவு செய்தான். நான் முடியாது என்று மறுத்து விட்டேன். அதற்கு சாமுவேல் பிளேடால் கையை கிழித்து கொண்டு நீ இல்லையென்றால் இறந்து விடுவேன் என்று பயமுறுத்தினான். அதை நான் கண்டு கொள்ளவில்லை. அதன்பிறகு மறுபடியும் சில நாட்கள் கழித்து இன்னொரு கையை கிழித்து கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் என்று அவனுடைய நண்பர்கள் எனக்கு தெரிவித்தார்கள்.

மறுபடியும் தொடர்பு கொண்ட நண்பர்கள், ‘நீ இல்லை என்றால் இறந்து விடுவான்’ என்று சொன்னார்கள். அவன் உன்னை கல்யாணம் செய்ய ஆசை படுகிறான் என்று அவன் நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். அதன்பிறகு அவனுடைய விருப்பத்தை நான் ஏற்று கொண்டேன். பல மாதங்களாக பழகினேன். அப்பொழுது அவனால் பாதிக்கப்பட்ட “பிரிஸ்கிலா” என்ற ஒரு பெண் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாமுவேலைப் பற்றி உனக்கு தெரியுமா அவன் ஏற்கனவே என்னையும் எனக்கு முன்னால் பல பெண்களையும் காதலித்து ஏமாற்றி இருக்கிறான் என்றார். அதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் மறுநாள் சாமுவேலை பார்க்கும்போது அவனுடைய மொபைல் போனை வாங்கி பார்த்தேன். அப்போது அந்த செல்போனில் பல பெண்களுடனும், மாணவிகளுடனும் கிளு கிளுப்பாக இருக்கும் போட்டோக்கள் ஏராளமாக இருந்தது. இதனால் அந்தப் பெண் சொன்னது உண்மை என்று தெரிந்து கொண்டு, பிறகு சாமுவேலிடம் இருந்து விலக ஆரம்பித்தேன். அவனிடம் இந்த பெண்கள் யார் என்று கேட்டேன். அதற்கு இது எல்லாம் மாபிங் செய்த போட்டோக்கள் என்று தெரிவித்தான். அதை ஏன் வைத்திருக்கிறாய் என்று கேட்டதற்கு சும்மா என்றான்.

இதனால் அவனது தவறான புத்தியை தெரிந்து கொண்ட நான், ஒதுங்க ஆரம்பித்தேன். சாமுவேலும் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை. திடீரென கடந்த வாரத்தில் வேறு ஒரு தொலைபேசியிலிருந்து என்னை தொடர்பு கொண்டு என்னிடம் பேச வேண்டும் என்று அழைத்தான். அதற்கு நான் மறுத்ததால் அவனுடன் நான் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்கில் அனுப்பிவிடுவேன் என்று மிரட்டி என்னிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டான். நீ தரவில்லையென்றால் சுவாதி கொல்லப்பட்டது போல் உனனை நான் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினான். அதன்பிறகு உடனே என் தொலைபேசியை கட் செய்தேன். பின்னர் பார்த்தால் சாமுவேல் உண்மையாகவே என்னிடம் நெருங்கி பழகின புகைப்படத்தையும் பல பெண்களிடம் பழகிய புகைப்படத்தையும் வாட்ஸ்-அப்பில் பரவ விட்டான். இதைப்பார்த்த என் குடும்பத்தாரும் என் அம்மாவும் என்னை திட்டி அடித்தார்கள். இதன் காரணமாக என் முழு குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். சாமுவேலை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

போலீசார் சாமுவேலுவை நேற்று முன்தினம் கைது செய்த பிறகு அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்து ரகசியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக உல்லாசமாக இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டியதால் பல லட்சம் ரூபாய் பறிகொடுத்த பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் புகார் அளித்து வருகின்றனர். சாமுவேலுக்கு உடந்தையாக இருந்த நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் போலீசார் கையில் சிக்கி உள்ளது. இதனால் ஓரிரு நாளில் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், சாமுவேலுவால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் யார் என்ற பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர். பணத்தை இழந்த பெண்கள் எத்தனை பேர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமுவேல் மீது புகார்கள் குவிந்து வருவதால் அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பிளேடால் அனைத்தையும் சாதித்தான்

சாமுவேல் காதல் வலையில் சிக்காத இளம் பெண்களிடம் பிளேடால் கையை கிழித்து தற்கொலை செய்து கொள்வது போல் நடித்து அவர்களை தன் வலையில் சிக்கவைத்ததும் தற்போது தெரியவந்துள்ளது. பல முறை பல காரணங்களுக்காக சாமுவேலை பெற்றோர் கண்டித்தபோது அவர்களிடலும் இதே பாணியை அவன் கடைபிடித்துள்ளான். அவனது பெற்றோருக்கு திருமணம் நடந்து 10 ஆண்டுகள் குழந்தை இல்லையாம். பல கோயில்கள் ஏறி இறங்கி பிறந்த குழந்தை என்பதால், அவன் செய்த தவறுகளை பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.