September 30, 2016
இளைஞனை மிரட்டி செக்ஸ்: பெண் மீது பாய்ந்தது பாஸ்கோ சட்டம்
தன்னை கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக இளைஞர் சுமத்திய குற்றச்சாட்டால் உத்தரப்பிரதேசத்தில் முதன் முதலாக ஒரு பெண் மீது பாஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன்னை மிரட்டி செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாகவும், மேலும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும் 23வயது பெண் மீது 16 வயது இளைஞர் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து அந்தப் பெண்ணின் மீது பாஸ்கோ (செக்ஸ் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுதல்) சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மைனர் மீது செக்ஸ் அத்துமீறல், கொன்று விடுவதாக மிரட்டுவது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''குற்றம் சுமத்தப்பட்ட பெண் கடந்த சில நாட்களாக வீடியோ ஒன்று வைத்துக் கொண்டு, அந்த இளைஞரை மிரட்டி செக்ஸ் உறவு வைத்துக் கொண்டுள்ளார். மேலும், திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இதற்கு அந்த இளைஞர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
முதலில் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளைஞனின் சகோதரர் புகார் செய்ய சென்றுள்ளார். இந்த வழக்கு வித்தியாசமாக இருப்பதால், போலீஸ் நிலையத்தில் அவரது புகாரை பதிவு செய்யவில்லை. இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தை அணுகினர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதன் முதலாக ஒரு பெண் மீது பாஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.f
இளைஞனை மிரட்டி செக்ஸ்: பெண் மீது பாய்ந்தது பாஸ்கோ சட்டம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 30, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.