September 19, 2016
இஸ்ரேலுக்கு நிதியுதவி அளிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்து!
இஸ்ரேலுக்கு பத்தாண்டுகளில் 38 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமெரிக்காவின் நட்பு நாடுகளின் வரிசையில் உள்ள இஸ்ரேல் நாட்டிற்கு கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் வரும் 2018 ஆம் ஆண்டு வரையான பத்து ஆண்டுகளில் அமெரிக்க அரசு 30 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்து வருகிறது.
இதற்கான ஒப்பந்தம் 2018 ஆம் ஆண்டு நிறைவுபெறும் நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் 38 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வாஷிங்டனில் கையெழுத்தாகியுள்ளது.
இந்தத் தொகை இஸ்ரேலின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறைத் துணை அமைச்சர் தாமஸ் ஷன்னான் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத் துறைத் தலைவர் ஜேக்கோப் நாகெல் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஈரான் நாட்டுடன் அமெரிக்கா மேற்கொண்ட ஒப்பந்தம் காரணமாக இஸ்ரேல் அரசுக்கு ஏற்பட்ட அதிருப்தியைக் களையவே இத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது அமெரிக்க வரலாற்றிலேயே வேறு எந்த நாட்டிற்கும் அளிக்கப்படாத அளவு அதிகமான தொகை எனக்கருதப்படுகிறது. ஆண்டிற்கு 3 புள்ளி 8 பில்லியன் என்ற முறையில் பத்தாண்டுகளில் இத்தொகை முழுவதும் அளிக்கப்படும்
இஸ்ரேலுக்கு நிதியுதவி அளிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்து!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.