கணவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதை அடுத்து, அவரது மனைவி கணவனின் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு மாநிலம் கதுவா மாவட்டம், பானி நகரத்தை சேர்ந்த மொஹமது டின் – ஷமீனா அக்தர். மொஹமது டின் அப்பகுதி காவல் நிலையம் ஒன்றில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்நிலையில், மொஹமது டின் சமீபத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஷமீனா தனது மகள் மற்றும் வேறு இருவரின் துணையுடன் அவரின் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார்.
இந்த ஆசிட் வீச்சில் மொஹமது பலத்த காயமடைந்தார். ஷமீனாவிற்கும் காயமேற்பட்டது. கணவன் – மனைவி இருவரும் கதுவா மாவட்ட துணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மொஹமது ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பானி நகர போலீஸ் அதிகாரி சுரேஷ் கவுதம் கூறுகையில் “ஷமீனா மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் ஷமீனா கைது செய்யப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.